|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 April, 2012

சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி !


பெட்ரோலைப் போலவே டீசலின் விலையையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா இதனைத் தெரிவித்தார்.இதுவரை பெட்ரோலின் விலையை மட்டுமே சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து வருகிறது. அதுவும் எந்த மாநிலத்திலாவது தேர்தல் வந்துவிட்டால், பெட்ரோல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை.சமீபத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வந்ததால் விலையை ஏற்ற மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட நிலையிலும் கூட விலை உயர்வுக்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.இதனால் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

அதே போல ஒரு லிட்டர் டீசலை விற்பதால் ரூ. 14 வரையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையால் ரூ. 300 வரையிலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயால் ரூ. 20 வரையிலும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதில் டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றால் தினந்தோறும் ஏற்படும் ரூ. 573 கோடி நஷ்டத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசே மானியமாகத் தந்து வருகிறது.ஆனாலும், தொடர்ந்து இது போல கொடுத்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை என்றும் இதனாஸ் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெயின் விலைகளை உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசை ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், சமையல் எரிவாயு- மண்ணெண்ணெய் விலையை உயர்த்தினால் ஓட்டுக்களில் பெரிய ஓட்டை விழும் என்று மத்திய அரசு அஞ்சுகிறது.

இதனால் டீசலின் விலையை மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், டீசல் விலை உயர்ந்தால் நாட்டில் எல்லா பொருட்களின் விலைவாசியும் உயரும் என்ற அச்சமும் மத்திய அரசிடம் உள்ளது.ஆனால், அரசை நடத்தவும் புதிய திட்டங்களை அமலாக்கவும் தேவைப்படும் நிதியைத் திரட்டவும், மாதந்தோறு டீசல் விற்பனையால் சந்தித்து வரும் பல்லாயிரம் கோடி ரூபாய் விரயத்தைத் தடுக்கவும் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.இதனால் டீசல் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கொள்கைரீதியில் முடிவெடுத்துள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.அதே நேரத்தில் சமையல் கேஸ் விலையை மத்திய அரசே தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...