|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 September, 2012

உலகின் துயரமான மனிதராக மன்மோகன் சிங்!பிரதமர் மன்மோகன் சிங்கை, அமெரிக்காவின், "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை, சரளமாக விளாசித் தள்ளியுள்ளது. "இந்தியாவின் மவுன பிரதமர், அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால், தற்போது, உலகின் துயரமான மனிதராக மாறி விட்டார்' என, அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.அமெரிக்காவிலிருந்து வெளியாகும், "டைம்' பத்திரிகை, சமீபத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து, கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், "இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், செயல்படாத பிரதமராக இருக்கிறார்' என, குறிப்பிட்டிருந்தது. தற்போது, அமெரிக்காவின், "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையிலும், பிரதமரை விமர்சித்து கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பி' என, புகழப்பட்டவர், பிரதமர் மன்மோகன் சிங். இந்தியா - அமெரிக்கா இடையோன, அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பலப்படுவதற்கும், முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர். சமீப காலமாக அவரது, "மிஸ்டர் க்ளீன்' இமேஜ், சரிந்து வருகிறது. ஊழல் மலிந்த அரசாங்கத்தை வழி நடத்தும் பிரதமராக மாறி விட்டார்.

"நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங், ராஜினாமா செய்ய வேண்டும்' என, இரண்டு வாரங்களாக, இந்திய பார்லிமென்டை, எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துள்ளன. ஐ.மு., கூட்டணியின், முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், மன்மோகன் சிங்கிற்கு, அதிக புகழ் கிடைத்தது. "நேர்மையானவர்' என, பாராட்டப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக, அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக, அவரின் புகழ், சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பும், சரிவைச் சந்தித்து வருகிறது. எந்தப் பிரச்னை குறித்தும், வாய் திறக்க மறுக்கிறார். இதனால், அவர் அமைச்சரவையில் உள்ளவர்கள், தங்கள், "பாக்கெட்டு'களை நிரப்பிக் கொள்கின்றனர். முக்கியமான நிகழ்ச்சிகளில், "மொபைல் போனை, "சைலன்ட் மோடு'க்கு மாற்றுங்கள்' என, கூறுவதற்கு பதிலாக, "மன்மோகன் சிங் மோடுக்கு மாற்றுங்கள்' என, இந்தியாவில், "கமென்ட்' உலா வரும் அளவுக்கு, மன்மோகன் சிங்கின், மதிப்பு சரிந்துள்ளது. "என்னுடைய கிளீனிக்கில் மட்டுமாவது, நீங்கள் வாய் திறக்க வேண்டும்' என, பல் மருத்துவர், மன்மோகன் சிங்கிடம் கூறுவது போன்ற, ஜோக்குகளும், இந்தியாவில் பிரபலமாகி விட்டன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...