|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2013

6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு இவ்ளோ தான் இழப்பு?தமிழக சட்டசபையில் சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 மாத காலத்துக்கு 'எம்.எல்.ஏ' என்ற தகுதியை இழக்கின்றனர். இதனால் அவர்கள் இழக்கும் சலுகைகள் என்ன தெரியுமா? 
சம்பளம் ரூ50 ஆயிரம்,
 தமிழக எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம் - ரூ.8,000,
 ஈட்டுப்படி - ரூ.7,000, 
டெலிபோன் படி - ரூ.5,000, 
தொகுப்பு படி - ரூ.2,500, 
தொகுதி படி - ரூ.5,000, 
தபால் படி - ரூ.2,500, 
வாகனப்படி - ரூ.20,000 என மொத்தம் ரூ50 ஆயிரம். 
 பயண சலுகைகள் எம்.எல்.ஏ. விடுதி வாடகை ரூ.250, பயணப்படி -
 ரெயிலில் ஏ.சி. இரண்டு அடுக்கு பெட்டிக்கான கட்டணம், தினப்படி - ரூ.500, தமிழகம் முழுவதும் இலவச பஸ் பாஸ். துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம், 
வீட்டில் ஒரு டெலிபோன். எம்.எல்.ஏ. விடுதியில் ஒரு டெலிபோன், எம்.எல்.ஏ. குடியிருப்பில் மாதம் ரூ.250 வாடகையில் ஒரு வீடு. (அல்லது) விடுதி வாடகை ஒரு நாளைக்கு 2 ரூபாய் 50 பைசா மட்டும்.
 சிகிச்சை சலுகைகள், இதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, 
வெளிச்சந்தையில் வாங்கும் மருந்துகளுக்கான தொகையை திரும்ப பெறலாம், 
பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு சில நிபந்தனைகளுடன் நிதி உதவி.,
அனைத்து புத்தகங்களுடன் கூடிய பிரமாண்டமான சட்டசபை நூலகத்தை பயன்படுத்தலாம், 
ஒரு உதவியாளர் உண்டு, 
நோட்டு, பேனா, பென்சில், கவர் உள்ளிட்ட எழுதுபொருட்கள் இலவசம், எம்.எல்.ஏ. விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்காக பிரத்யேக ரயில் டிக்கெட் கணினி முன்பதிவு மையம், 
ரயில் நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு ஆண்டுக்கு 2 தவணையாக ரூ.20,000, 
நிவாரண உதவிகள் இறந்தால் ரூ.2 லட்சம், எம்.எல்.ஏ.வுக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வசதி, இறந்த எம்.எல்.ஏ. குடும்பத்திற்கு குடும்பப்படி மாதம் ரூ.1,000, சட்டப்பூர்வ வாரிசுக்கு மொத்த தொகையாக ரூ.2 லட்சம் தரப்படும். இறந்த எம்.எல்.ஏ.வின் சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.5,000 கிடைக்கும் ஆனால் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இத்தனை சலுகைகளும்  ஆறு மாதம் கிடைக்க வழியில்லையாம்!!


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...