|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2013

தமிழர்களுக்கு கொடுமை.. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் ராணி எலிசபெத்!இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இங்கிலாந்து ராணி பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டதாக லண்டனில் உள்ள காமன்வெல்த் அமைப்பின் செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கனடா பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ள நிலையில், பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்ரேலியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என திமுக, அதிமுகவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் இங்கிலாந்து ராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு முக்கியமான பின்னடைவாக அமையும். இந் நிலையில் இந்த மாநாட்டையே மொரீசியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...