|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2013

முதல் சாதனை பெண்கள்அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.

சில முக்கியத் துறைகளில் முதல் இடம் பிடித்த பெண்களின் பட்டியல் இது...

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட்
மௌன்ட் எவரெஸ்ட்டில் முதல் முறையாக ஏறிய பெண் - பச்சேந்திரி பால்
மௌன்ட் எவரெஸ்ட்டில் இரண்டு முறை ஏறி சாதனை படைத்த பெண் - சந்தோஷ் யாதவ்
இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி. முத்தம்மா
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
முதன் முதலாக  ஞானபீட விருது பெற்றவர் - ஆஷ்பூர்ணா தேவி
முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி
முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா
ஆங்கிலக் கால்வாயை முதன் முதலாக நீந்தி கடந்த பெண் - ஆர்த்தி சாஹா
இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட்
இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி
இந்தியாவில் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல் - பி. பண்டோபாத்யாயா
இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம்.  பாதிமா பீவி
உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்)
முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி
முதல் பெண் வழக்குரைஞர் - கார்நெலியா சொராப்ஜி
முதல் பெண் முதலமைச்சர் - சுசீதா கிரிபாலனி
ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்ற இந்திய பெண் - கமலிஜித் சாந்து
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000)
முதல் பெண் விமானி - சுசாமா
முதல் பெண் தபால் நிலைய தலைமை அதிகாரி - கன்வால் வர்மா
கிரிக்கெட் விளையாட்டில் முதல் பெண் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்
ஆங்கிலப் படையுடன் போரிட்டு வென்ற பெண் - ராணி வேலு நாச்சியார்
புக்கர் விருது பெற்ற இந்தியப் பெண் - அருந்ததி ராய்
இராணுவத்தில் பதக்கம் பெற்ற முதல் பெண் - பீம்லா தேவி
உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் - ரெய்தா பரியா
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
இதுபோன்று முக்கியத் துறைகளில் இடம்பிடித்த முதல் பெண்கள் என்ற பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கும். அவ்வளவையும் தொகுக்க முடியாமல் இங்கு ஒரு சில முக்கியத் துறைகளை மட்டும்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...