|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 July, 2011

ஆபாச ‌வீடியோ ஒழு‌க்க ‌பிர‌ச்சனை ம‌ட்டுமே - நி‌த்யான‌ந்தா ???

ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ: என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.

தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்: என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

நானும் ஒரு பத்திரிக்கையாளன்: நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.

சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.

நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்: அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:  முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...