|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 July, 2011

சிங்கள தீவிரவாத ஆய்வு நிபுணர், லக்பீமா பத்திரிக்கை மீது கனடிய தமிழ் அமைப்பு வழக்கு

சிங்கள பத்திரிக்கையான லக்பீமா மற்றும் சிங்கள தீவிரவாத ஆய்வ நிபுணர் ரோஹன் குணரத்னா ஆகியோர் மீது கனடா கோர்ட்டில், கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு உலகில் உள்ள மிக வலுவான, தமிழர் அமைப்புகளில் முக்கியமானதாகும். இந்த அமைப்பில் கனடாவில் வாழும் 3 லட்சம் தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஈழப் போரின்போது ஈழத்தில் நடத்தப்பட்ட போர்க்குற்றம் மற்றும் அநியாயத் தாக்குதல்களைக் கண்டித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது இந்த அமைப்பு. இலங்கையின் தாக்குதல் செயல்களை கனடா அரசுக்கும், உலக நாடுகளுக்கும் அம்பலப்படுத்தி வந்தது.

இந்தநிலையில் சிங்களப் பத்திரிக்கையான லக்பீமா மற்றும் ரோஹன் குணரத்னா ஆகியோர் மீது டோரன்டோ கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது இந்த அமைப்பு. இந்த வழக்கை அமைப்பின் தலைவர் உமாசுதன் சுந்தரமூர்த்தி, செய்தித் தொடர்பாளர் டேவிட் பூபாளப் பிள்ளை ஆகியோர் தொடர்ந்துள்ளனர்.

அதில், சிங்கப்பூரிலிருந்து செயல்படும் ஹோரன் குணரத்னா, லக்பீமா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் கனடிய பிரதிநிதிகளாக கனடிய தமிழ் காங்கிரஸ் செயல்படுவதாக பேட்டி அளித்துள்ளார். அதை லக்பீமா செய்தியாக வெளியிட்டுள்ளது.

தனது பேட்டியில், விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில், கனடிய தமிழ் காங்கிரஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. கனடாவில் இந்த அமைப்புதான் புலிகள் அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் குணரத்னா.

2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்மக்களின் வாழ்வாதரத்தை உயர்விக்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. ஆனால் ரோஹன் குணரத்னாவின் இக் கூற்று இந்த அமைப்பை களங்கப்படுத்துவதாக உள்ளது. அவர் கூறியது அவதூறானது மட்டுமல்ல, பொய்யான தகவலும் கூட.எனவே இந்த அவதூறான செய்திக்காக அவர்கள் பத்து லட்சம் டாலர் நஷ்ட ஈட்டைத் தர வேண்டும் என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...