|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 August, 2011

தமிழக பட்ஜெட் 8900 கோடிக்கு புதிய திட்டங்கள்


தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மோனோரெயில் திட்டப் பணிகளை இந்த ஆண்டே துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவங்கப்படும், நடமாடும் மருத்துவமனைகள் செயல்படுத்தப்படும், 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே அறிவித்தபடி மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செப்டம்பர் 15ம் தேதி அன்று முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்படும்.  தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  
அதில் அவர் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தார். வரி நிர்வாகம் குறித்து அவர் கூறியதாவது: 
201112ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை மொத்த வருவாய் வரவுகள் ரூ.79 413.26 கோடி எனவும், செலவு ரூ.78,974.48 கோடி எனவும், வருவாய் உபரி ரூ.438.78 கோடி எனவும் மதிப்பிடப்பட்டது.  இந்த இடைக்கால நிதிநிதி அறிக்கையில் நிதிப்பற்றாக்குறை ரூ.13,506.85 கோடியாக மதிப்பிடப்பட்டது.  

வணிக வரித்துறையில் மின்னணு ஆளுகை முறைகளை புகுத்துவது அவசியமாக கருதப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.45.37 கோடியை அனுமதித்துள்ளது.  இதில் மத்திய அரசின் பங்கு ரூ.31.26 கோடியாகும்.

மின் ஆளுகை முறையை முழுமையாக புகுத்த அரசுஇந்த நிதியை பயன்படுத்திக்கொள்ளும். வணிக வரித்துறையில் உள்ள நிலுவைகளை முடிவுக்கு கொண்டு வர சமாதான் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 2012 மார்ச் 31ம் தேதி வரை மீண்டும் ஒரு சமாதானதிட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

இதேபோல  பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆய்வுக்காகவும் சந்தை விலையை நிர்ணயம் செய்வதற்காகவும் அதிகஅளவில் நிலுவையில் உள்ளன.  இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. எனவே வசூலிக்கப்படாமல் உள்ள இந்த தொகையை வசூலிக்கும் பொருட்டும் பொது மக்களுக்கு பத்திரங்கள் திரும்ப கிடைக்கச் செய்யும் பொருட்டும் சமாதான் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த அரசு தொடங்கி உள்ள பல்வேறு புதிய திட்டங்களையும் வளர்ச்சி முயற்சிகளையும் செயல்படுத்த கூடுதல் நிதி தேவை ரூ.8900 கோடியாகும். இந்த திட்டங்களை நிறைவேற்ற நிதி ஆதாரத்தை பெருக்க ஏற்கனவே அரசு வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்ததின் மூலம் அரசுக்கு ரூ.3618 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த திருத்த வரவு  செலவு மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவு ரூ.85,685 கோடி. இதில் செலவினம் ரூ.85,511 கோடி. வருவாய் உபரி ரூ.173.87 கோடி. அதே சமயம் நிதிப்பற்றாக்குறை ரூ.16,881 கோடியாகும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.90 விழுக்காடாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...