|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 August, 2011

ஆன்ட்ராய்டுடன் வரும் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவது குறித்து எல்ஜி தகவல்களை வெளியிடுவதற்கு முன்பே இன்டர்நெட்டில் அந்த போனை பற்றிய தகவல்கள் காட்டுத்தீ போல பரவிவிடுகிறது. இதேபோன்று, அந்த நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் ஆன்ட்ராய்டு போன் குறித்த தகவல்களும் இன்டர்நெட் காற்றில் பறக்கிறது. விரைவில் எல்ஜி அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ,ஸ்மார்ட்போன் எல்ஜி ஆப்டிமஸ் யூனிவா பற்றிய தகவல்களும் இன்டர்நெட்டில் உலா வருகிறது..

யூனிவா பற்றிய தகவல்களை துவங்குவதற்கு முன் முதலில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு நன்றி கூற வேண்டும்.. 3.5 இஞ்ச் தொடுதிரை கொண்ட இந்த போனில் அப்ளிகேஷன்களை எளிதாக இயக்குவதற்கு ஆன்ட்ராய்டு வெகுவாக துணைபுரிகிறது.

இந்த போனில் அப்ளிகேஷன்களை இயக்கும்போது ஓர் பரவசமான புதிய அனுபவத்தை இந்த போன் கொடுக்கும் என்பது உறுதி. நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த போன் நிச்சயம் இளைஞர்களை வெகுவாக கவரும்.

ஆற்றல்வாய்ந்த 5 மெகாபிக்செல் கேமராவை கொண்டிருந்தாலும், வீடியோ காலிங் செய்வதற்கு ஏதுவாக முகப்பு கேமரா இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. எம்பி-3, எம்பி-4, டபிள்யூஎம்வி, டபிள்யூஏவி மற்றும் ஏஏசி உள்ளிட்ட அனைத்து மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்கலாம். ஆர்டிஎஸ் வசதிகொண்ட எப்எம் ரேடியோ மற்றும் 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவையும் இருக்கிறது.

720பி பார்மெட்டில் ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் செய்யவும் முடியும். ஆடியோ மற்றும் வீடியோ மல்டிமீடியா அம்சங்களில் இந்த போன் குறைவைக்காது. அனைத்து பார்மெட்டுகளிலும் இயங்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5மெகாபிக்செல் கேமரா கொண்ட இதன் கேமரா துல்லியமான புகைப்படங்களை எடுக்கவும், ஹைடெபினிஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்யவும் உதவி புரிகிறது.எப்எம் ரேடியோ, 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவையும் இருக்கிறது.

நல்ல சேமிப்பு திறனை கொண்ட இந்த போனில் 32 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனையும் பெற முடியும். 3ஜி, வைஃபை உள்ளிட்ட இணைப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது. புளூடூத், கம்ப்யூட்டரில் இணைக்க யுஎஸ்பி போர்ட்டும் இருக்கிறது. 2ஜி நெட்வொர்க்கில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் இணைப்பு வசதிகளை பெற முடிகிறது. ஜிபிஎஸ் மற்றும் ஏஜிபிஎஸ் ஆகிய நேவிகேஷன் வசதிகளையும் பெறலாம்.

குறிப்பிடத்தக்க அம்சங்கள்:ஆன்ட்ராய்டு ஓஎஸ், 5 மெகாபிக்செல் கேமரா, ஜாவா சப்போர்ட், 3ஜி, வைஃபை, மல்டி பார்மெட் வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர், 3.5மிமீ ஆடியோ ஜாக், ஏஜிபிஎஸ் கொண்ட ஜிபிஎஸ், நடுத்தர ரக ஸ்மார்ட்போனை சேர்ந்த எல்ஜி ஆப்டிமஸ் யூனிவாவின் விலை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...