|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 August, 2011

அரசு கேபிள் டிவி ...!


அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு  தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், குறிப்பாக, இரண்டாம் நிலை நகரங்கள், ஊரகப்பகுதிகளில் இந் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து தரும். ’’உலகளவில் தகவல் தொழில்நுட் பத்திற்கும், அதனைச் சார்ந்த சேவை நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஒரு முக்கிய முதலீட்டு இடமாக அமைந் துள்ளது. 

இம்மாநிலத்தில் 2010-11ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 40,000 கோடி ரூபாயாகும். தகவல் தொழில்நுட்பமும், அதனைச் சார்ந்த தொழில்களும் வளர்ச்சி யடைய இந்த அரசு அனைத்து வசதிகளையும் தொடர்ந்து செய்து தரும்.

இரண்டாம் நிலை நகரங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்புகளை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு காலியாக உள்ள இடங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.


கணினி வன்பொருள் துறையில் முதலீட்டினை ஈர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசானது புதிய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பக்கொள்கை 2011ஐ உருவாக்கும். இக்கொள்கையானது மென்பொருள், வன்பொருள் தொழில் களை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையி லும் அமையும்.
16 மாவட்டங்களில் புதிய தலைமுனை யங்கள் நிறுவியும், 11 மாவட்டங் களில் தனியார் தலைமுனைய களுடன் ஒப்பந்தம் செய்தும் ஒளிபரப்பு வசதிகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இத்தகைய தலைமுனையங்களிலிருந்து விரைவில் மாநிலம் முழுவதும் ஒளிபரப்பு தொடங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவித்தபடி, அரசு கம்பிவட தொலைக்காட்சிக்கழகத் தைப் புத்துயிரூட்ட இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தஞ்சா வூர், கோயம்புத்தூர், வேலூர், திரு நெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஒளிபரப்பு தலைமுனையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50 கி.மீ. சுற்றெல்லையில் இருக்கும் கம்பிவட இயக்குபவர்கள் அரசு கம்பிவட தொலைக்காட்சி சேவையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...