|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2011

விமான பணிப்பெண்களின் மார்பகத்தை சோதிப்பதால் சர்ச்சை!

தென்கொரியா தலைநகரில் இந்தோனேஷியா நாட்டுக்கு சொந்தமான கருடா விமான சேவை நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.  இந்த விமான நிறுவனம் சார்பில் இங்கிருந்து 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பணிப்பெண்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களை ஒவ்வொரு முறையும் விமானத்தில் பறக்கும் முன்பு டாக்டர்களை கொண்டு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. பணிப்பெண்கள் சிலர் சிலிகான் மார்பகங்களை பொருத்தியுள்ளனர். மேலும் மார்பகங்களில் பச்சை குத்திக் கொள்கின்றனர்.

விமானம் வானத்தில் பறக்கும் போது, காற்றின் அழுத்தம் குறைவு ஏற்பட்டால் சிலிகான் மார்பகங்கள் வெடிக்கவும், பச்சை குத்திய மார்பகங்களில் வலியும் தோன்றும் ஆபத்துக்கள் உள்ளன.   எனவே பணிப்பெண்கள் சிலிகான் மார்பகங்கள் பொருத்தி இருக்கிறார்களா? பச்சை குத்தி இருக்கிறார்களா? என்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் உடைகளை களையச் செய்து மார்பங்களை கையால் பிடித்து நடத்தப்படும் இந்த சோதனை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மார்பகத்தில் சோதனை நடத்த மாற்று வழிகள் பல இருக்கும்போது கையினால் பிடித்து சோதித்து பார்ப்பது ஏற்க முடியாதது. அதுவும் ஆண் டாக்டர்கள் இதை செய்வது சகிக்க முடியாதது என்று பெயர் சொல்ல விரும்பாத பணிப்பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இதுபற்றி விமான நிறுவன அதிகாரி ஒருவர், விமான பணிப்பெண்கள் உடலில் பச்சை குத்திக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்படும் பணிப்பெண்களுக்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மார்பகங்களில்தான் பெண்கள் பச்சை குத்திக் கொள்கின்றனர் என்பதால், மார்பகங்கள் சோதித்து பார்க்கப்படுகின்றன. ஆனால் கைகளால் தொட்டு சோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் புகார் தவறானது. பார்வையால் மட்டுமே இது செய்யப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...