|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2011

அத்துமீறும் சீனாவை அடக்க 1 லட்சம் இந்திய வீரர்கள் எல்லையில் !

பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும் இந்தியாவுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறது. அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடியது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. சீனாவில் விரட்டப்பட்ட திபெத் புத்தமத துறவி தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து இருப்பதும் அந்த நாட்டுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பிரச்சினையை காரணம் காட்டி 1962-ல் சீனா இந்தியா மீது போர் தொடுத்தது. அப்போதைய பிரதமர் நேரு இதை சமாளித்தார். அதன் பிறகு அடிக்கடி இந்திய எல்லைப் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி ஊடுருவ முயற்சி செய்து வருகிறது.குறிப்பாக காஷ்மீரின் லடாக் பகுதியிலும், உத்தரகாண்ட் இமயமலை பகுதியிலும் சீனா ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக சாலை போடும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. 

இதேபோல் அந்தமான் தீவுகளை குறிவைத்து வங்க கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் சீன கப்பல்களின் ரகசிய நடமாட்டத்தை சமீபத்தில் இந்திய கடற்படை கண்டுபிடித்தது.   சீனாவில் இந்த அத்துமீறல்கள் பற்றி இந்திய ராணுவ தளபதிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் சீன எல்லைப் பகுதியில் 1 லட்சம் வீரர்களை குவிக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்கள் படிப்படியாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. முதலில் லடாக் பகுதியிலும், ஜார்க்கண்ட் எல்லையிலும் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். மற்ற இடங்களில் படிப்படியாக வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர். சீன எல்லையில் 4 டிவிஷன்களில் வீரர்கள் குவிக்கப்படுகிறார்கள். இதற்காகவும், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காகவும் கூடுதலாக ரூ.64 ஆயிரம் கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. 1962-ம் ஆண்டு போருக்கு பின் எல்லை பாதுகாப்பு படைக்காக இந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...