|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2011

மழைக்கால நோயில் இருந்து தப்பிக்க!

மழைக்கால நோயில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து முன்னாள் பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, ’’மழைக்காலங்களில் குழந்தைகள், முதியவர்களை வயிற்று போக்கு-வாந்தி பேதி அதிகம் பாதிக்கும். இதனால் பொதுவாக தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். தெருவோரம் மற்றும் சாலை யோரங்களில் விற்க கூடிய உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், பெரியவர்களுக்கு உணவுகளை சூடாக கொடுக்க வேண்டும்.   வீடுகளில் கழிவு நீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். வீடுகளில் கொசு வலை பயன்படுத்த வேண்டும். கொசு வலையை பயன்படுத்தினால் கொசுவினால் ஏற்படக் கூடிய மலேரியா, டெங்கு, மூளை காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பித்து கொள்ளலாம். ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிப்பதை சுகாதாரத்துறை தீவிர ஆய்வு செய்ய வேண்டும். சுத்தமான நீரில் உணவு தயாரிக்கப்படுகிறதா? உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஈ மொய்த்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றை பின் பற்றினால் மழைக்காலத்தில் வரக்கூடிய நோயில் இருந்து தப்பிக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...