|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 November, 2011

மத்திய அமைச்சர் அழகிரியின் எம்.பி., அலுவலகத்தை பறிமுதல் செய்ய, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் !

 மத்திய அமைச்சர் அழகிரியின் எம்.பி., அலுவலகத்தை பறிமுதல் செய்ய, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவசர கூட்டத்தீர்மானமாக மூன்று தீர்மானங்களை மேயர் ராஜன் செல்லப்பா கொண்டு வந்தார். அதில், "மதுரை மேலமாரட் வீதியில் மாநகராட்சியின் பழைய தெற்கு மண்டல அலுவலகம் இருந்தது. தற்போது மண்டலம் 4 என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன் கீழ் தளத்தில், 2,000 ச.அ., பரப்பு கொண்ட அலுவலகத்தை, "மதுரை எம்.பி., அலுவலகமாக வாடகை இன்றி பயன்படுத்த,' 2009 செப்., 24ல் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்படைத்தனர். தற்போது மாநகராட்சி விரிவாக்கத்தில் அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, புதுக்குளம் பிட்2, தியாகராஜர் காலனி பகுதிகள் மண்டலம் 4ல் இணைந்தன. அதற்கான அலுவலர்கள் பணியாற்ற, போதிய இடவசதி இல்லை. அவர்களிடமிருந்து பெற்ற ஆவணங்களை வைக்கவும் இடம் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கடந்த 2009 அக்., முதல் செயல்படாத, மதுரை எம்.பி., அலுவலகத்தை பயன்படுத்தவும், 2009ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யவும் அனுமதிக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டு இருந்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் ராஜன்செல்லப்பா கூறியதாவது: தீர்மானம் குறித்து, அழகிரிக்கு கடிதம் அனுப்பப்படும். அதைத்தொடர்ந்து, அலுவலகத்தை மாநகராட்சி பயன்பாட்டிற்கு எடுப்போம், என்றார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...