|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 November, 2011

பச்சிளம் குழந்தை மிதித்து கொலை தந்தையின் வெறிச்செயல்!

வேலூர் பாகாயம் சஞ்சீவிபுரம் முல்லை நகரை சேர்ந்த ஜோசப் மகள் செல்வமேரி(30). இவரது கணவர் காஞ்சிபுரம் புள்ளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏசுபாதம்(30). இவர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ்குமார் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. ஏசுபாதம் அங்கு கள்ளச்சாராய விற்பனை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு சாராய வழக்குகளும் உள்ளன. இதனால் அடிக்கடி வீட்டுக்கு போலீசார் விசாரணைக்கு வருவதும், போவதுமாக இருந்ததால் வெறுத்துப்போன செல்வமேரி திருமணமான மூன்றே மாதங்களில் வேலூர் பாகாயத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். 

இங்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். ஏசுபாதமும் அடிக்கடி வேலூர் வந்து மனைவியை பார்த்துவிட்டு செல்வாராம். அப்போதெல்லாம் கணவன்&மனைவிக்கு இடையே தகராறு நடக்குமாம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் வந்த ஏசுபாதம், தனது மனைவி குழந்தையுடன் தங்கியுள்ளார். அப்போதும் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மனைவியிடம் அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்ட ஏசுபாதம், ‘குழந்தையை நான் வைத்துக் கொள்கிறேன். நீ மழையால் சேதமடைந்த மண் சுவரை பூசி மெழுகிவிட்டு வா’ என்று கூறியுள்ளார். 

இதனால் குழந்தையை கணவனிடம் கொடுத்துவிட்டு சென்ற செல்வமேரி, தனது குடிசையின் பின்பக்க சுவரை மண்ணை பிசைந்து பூசி மெழுகிக் கொண்டிருந்தார். அப்போது மனைவியை ஏசுபாதம் அழைத்து, ‘குழந்தை கழிந்துவிட்டது, அதை கழுவ வேண்டும்’ என்று கூறியுள்ளார். செல்வமேரியும் உடனடியாக குழந்தையின் கால்களை கழுவ தூக்கியுள்ளார். அப்போது குழந்தை இறந்திருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமேரி கதறி அழுதபடி, ‘குழந்தையை என்ன செய்தாய்?’ என்று கணவரிடம் ஆவேசமாக கேட்டார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதை பார்த்த ஏசுபாதம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

குழந்தையின் சடலத்தை பார்த்த போது, அதன் கழுத்தில் காலால் மிதித்த அடையாளம் இருந்தது. மனைவியின் மீது உள்ள கோபத்தால் தனது குழந்தையை கழுத்தை மிதித்து ஏசுபாதம் கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து செல்வமேரி, வேலூர் பாகாயம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான ஏசுபாதத்தை தேடி வந்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த ஏசுபாதத்தை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும், அதில் குழந்தை சுருண்டு விழுந்து இறந்ததாகவும்’ தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...