|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 November, 2011

பிணத்தை மீட்க கிணற்றில் குதித்தவரையும் காணவில்லை !
சேலம் நகரத்தில் உள்ள கிக்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கன் வெங்கடேசன். இவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். மாலை நேரங்களில் சில்லி சிக்கன் கடை நடத்தி வரும் இவருக்கும், அந்தப் பகுதியில் உள்ள வேறு சில ரவுடி கும்பலுக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. 
நேற்று மாலை கடை போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேசனையும், அவரது நண்பர் புறா சரவணன் என்பவரையும் ஒரு கும்பல் வழி மறித்து வெட்டி கொலை செய்துள்ளனர். வெங்கடேசன் பிணத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு, புறா சரவணனின் கழுத்தை அறுத்ததுடன், பக்கத்தில் இருந்த 70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் போட்டுள்ளனர். 

வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்ற போலீசார், சரவணனின் உடலை எடுப்பதற்காக இரவிலிருந்து மின்சார மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது 45) என்பவர் தான் கிணற்றில் இறங்கி புறா சரவணனின் உடலை எடுப்பதற்காக குதித்தார்.  
உள்ளே போன ராமலிங்கம் இதுவரை வெளியே வரவில்லை. ராமலிங்கம் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் போலீசார் அவரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...