|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 December, 2011

சசிகலா குடும்பத்தினர் 14 பேரை, கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீக்கம்...


சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். இவர் மாதமிருமுறை இதழ் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது சகோதரர்களில் ஒருவர் எம்.ராமச்சந்திரன். இவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  சசிகலாவுடன் பிறந்தவர்களில் 4 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. இதில் மூத்தவர் சுத்தரவரதன். இவருக்கு டாக்டர் வெங்கடேஷ் என்ற மகனும், அணுராதா, பிரபா சிவக்குமார் என்ற இரண்டு மகளும் உள்ளனர். ஜெயலலிதாவின் இளைஞர் பாசறையின் நிர்வாகியாக இருந்தவர் டாக்டர் வெங்கடேஷ். தற்போது இவர் நீக்கப்பட்டுள்ளார்

சசிகலாவின் இரண்டாவது சகோதரர் விநோதகன். இவருக்கு டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நீக்கப்பட்டோர் பட்டியலில் இவர்களும் உள்ளனர். சசிகலாவின் சகோதரி வனிதாமணி. இவருக்கு மூன்று மகன்கள். இவர்களில் மூத்தவர் டிடிவி தினகரன். இவர் அதிமுக சார்பில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராக இருந்தவர். வனிதாமணியின் மற்ற இருமகன்கள் பாஸ்கரன் மற்றும் சுதாகரன். இவர்கள் மூவரும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். 
சசிகலாவின் மூன்றாவது சகோதரர் ஜெயராமன். இவரது மனைவி இளவரசி. சொத்து குவிப்பு வழக்கில் இவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எம்.நடராஜனின் சகோதரர் மகன்களான குலோத்துங்கர் மற்றும் ராஜராஜன் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் கடைசி சகோதரர் திவாகரன். மன்னார்குடியில் வசித்து வரும் இவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன். இவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...