|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 December, 2011

விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் பி.எஸ்.என்.எல்

விரும்பிய மொபைல் எண்ணை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக தொலைபேசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக தொலைபேசி வட்டம்,http://http://tamilnadu.bsnl.co.in என்ற இணையதளத்தில் ஒரு லட்சம், "3ஜி' எண்களை வழங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் சென்று, வாடிக்கையாளர்களே தங்களுக்கு விருப்பமான எண்களை தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர்கள், ஒரு எண்ணை தேர்வு செய்தவுடன், ஏழு இலக்கம் கொண்ட ரகசிய அடையாள எண் கொடுக்கப்படும். பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைலில் இருந்து, NLIST என்று டைப் செய்து, இடைவெளி விட்டு, தேர்வு செய்த நம்பரின் கடைசி, மூன்று முதல் ஐந்து இலக்க நம்பரை டைப் செய்து,"53733' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.

மற்ற வாடிக்கையாளர்கள், "94000 12345' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மற்ற வாடிக்கையாளர்களுக்கும் ஒரு ரகசிய அடையாள எண் அளிக்கப்படும். அதன்பின், தங்கள் பகுதியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அடையாள எண்ணை கொடுத்து, தேர்வு செய்த நம்பரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...