|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 December, 2011

எகிப்தை போல இலங்கையிலும் ஆட்சியை கவிழ்க்க சதி: ராஜபக்சே!


 மனித உரிமைகள் மீறப்படுவதமாகக் கூறி எகிப்தைப் போல, இலங்கையிலும் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது. ஆனால் அது வெறும் பகல்கனவாகவே முடியும் என்று மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் முடிவுகளில் நம்பிக்கை வைக்காது, வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்திய காலம் மாறிவிட்டது. அந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். பிரச்னையைத் தீர்ப்பதற்கு நாட்டைப் பிரித்து கொடுப்பது தான் தீர்வு என்று வெள்ளைக்காரர்கள் எண்ணியிருந்ததை,  நாம் நாட்டைப் பிரிக்காமலேயே தீவிரவாதத்துக்கு முடிவு கட்டி விட்டோம் என தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேடப் பலரும் முனைகின்றனர். அவர்கள் எதற்கு இதைச் செய்கின்றனர் என்று மக்களுக்குத் தெரியும். வதந்தி, சூழ்ச்சிகளுக்கு மக்கள் அகப்படக் கூடாது. ஒருபோதும் பின்னோக்கித் திரும்பிவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...