|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 December, 2011

உலகிலேயே உயரம் குறைவான பெண்...






 இரண்டடி ஒரு அங்குலம் உயரமே கொண்ட, நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்ஜி,18, உலகிலேயே மிகவும் உயரம் குறைவான பெண்ணாக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், ஹிவ்ரி நகர் பகுதியில் வசிப்பவர் ஜோதிஅம்ஜி,18. இவர், நேற்று தன் பிறந்த நாளை பெற்றோர், உறவினர் களுடன் கொண்டாடினார். அப்போது, அவருக்கு, மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. உலகிலேயே மிகவும் உயரம் குறைவான பெண்ணாக, அவர் தேர்ந்தெடுக்கப் பட்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகத் தில் இடம் பெற்றுள்ளார் என்பதே, அந்தச் செய்தி. கின்னஸ் உலக சாதனை புத்தக நிறு வனத்தைச் சேர்ந்த ராப்மோலி என்பவர், கடந்த இரு தினங்களாக, அக்கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது, மாறு பட்ட நேரங்களில், அப்பெண்ணின் உயரத்தை, மூன்று முறை அளந்து, விவ ரங்களை பதிவு செய்தார். அதேபோல், அவர் தேர்வு செய்த டாக்டர்களும், அப்பெண்ணை நிற்க வைத்தும், படுக்க வைத்தும் அளந்து பரிசோதித்தனர். பிறந்த நாளின் போது, உலக சாதனை புத்தகத்தில் பெயர் இடம் பெற்றது குறித்து அறிந்ததும், ஜோதி அம்ஜி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

அவர் கண்ணீருடன் கூறுகையில், "இச்செய்தி, எனது பிறந்த நாளைக்கு கிடைத்த இரண்டாவது பரிசு. இதன் மூலம், நாக் பூரை உலக வரைபடத்தில் சேர்த்துள் ளேன். பள்ளிக் கல்வி முடித்துள்ள நான், விரைவில் பட்டம் பெற முயற்சிப்பேன்' என்றார். இவர், நான்கு மாத குழந்தையாக இருந்தபோது, வளர்ச்சியை தடுக்கும் அகோண்ட்ரோ பிளாசியா என்ற நோய் தாக்கவே, அவரது உயர வளர்ச்சி நின் றது. இவர், தன் 16வது வயதிலும், 2009ம் ஆண்டில் உலகில் உயரம் குறைந்த சிறுமி என, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். இவர், ஏற்கனவே, ஜப்பான் நாட்டு திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், நேஷனல் ஜியோகிரபி தொலைக்காட்சி சேனலிலும் பங்கேற்றுள்ளார். "ஒரு இந்தி படத்தில் நடிக்க வேண்டும்' என்பதே, அப்பெண்ணின் கனவாக இருந்து வருகிறது. இதற்கு முன்பாக, உலகில் உயரம் குறைந்த பெண்ணாக, அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்ஜெட்டி ஜோர்டான்,22, இருந்து வந்தார். அவருக்கும் முன்பாக, துருக்கி நாட்டைச் சேர்ந்த எலிப் கோகாமன் (28.5 அங்குலம்), அதற்கு முன், நெதர்லேண்ட் நாட்டைச் சேர்ந்த பாவ்லின் மஸ்டர்ஸ் (24 அங்குலம்) இருந்தனர். பாவ்லின் மஸ்டர்ஸ், தன் 19வது வயதில், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, 1895ம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...