|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 December, 2011

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க சட்டத் திருத்தம்...


பாரத ரத்னா வழங்குவதற்கான நெறிமுறைச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. கலை, இலக்கியம், அறிவியல், பொதுமக்கள் சேவை உள்ளிட்ட தளங்களில் பணியாற்றியவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பாரத ரத்னா விருது, இனி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சச்சின், ஹாக்கி வீரர் தயானந்த் சந்து உள்ளிட்டோருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கப்படலாம் என விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...