|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 December, 2011

விடுதலைப்புலிகள் தடைக்கு எதிரான வழக்கு விரைந்து நடத்த தலைமை நீதிபதியிடம் வைகோ கோரிக்கை!


விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையை நீக்க வேண்டுமென கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடுத்த ரிட் மனு உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி இன்று (16.12.2011) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வில் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.

"இந்திய அரசு நியமித்த தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை ஏற்றுக் கொண்டு வழங்கிய ஆணையை எதிர்த்து இந்த உயர் நீதிமன்றத்தில் நான் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறேன். தடை உத்தரவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்றும் இந்த உயர் நீதிமன்றத்தில் இதுபற்றி நான் குறிப்பிட்டேன். எனவே, எனது ரிட் மனு மீது விரைவில் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று வைகோ கூறினார். தலைமை நீதிபதி இக்பால், "உங்கள் ரிட் மனு ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...