|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 December, 2011

அண்ணா நூலக இடமாற்றத்துக்கு தடை தொடர்கிறது...

சென்னை அண்ணா நூலக இடமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பில் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 பேர் தாக்கல் செய்த பொதுநல மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் கல்வித்துறை வளாகத்தில் புதிய நூலகம் கட்டும் பணிகள் ஏதாவது நடைபெறுகிறதா என்று நீதிமன்றம் கேட்டது. அரசுத் தரப்பில் இல்லை என்று பதில் வந்தபின், மறு உத்தரவு வரும்வரை, கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், ஜன.19க்குள் பதிலளிக்குமாறு கூறிய நீதிமன்றம், ஜன.19ம் தேதி விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தது. மேலும், தற்போதை நிலையில், அண்ணா நூலகத்தை சீராகப் பராமரிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...