|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2012

சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்!


தலவரலாறு: இலங்கையின் நல்லூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆரம்ப காலத்தில், சில அரசியல் காரணங்களால் நல்லூரின் பல்வேறு இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டது. இக்கோயில், குருக்கள் வளவு என்ற இடத்தில் கி.பி 948ம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அன்னிய நாட்டினரின் படையெடுப்பால், இக்கோயில் பல்வேறு இடங்களில் பல முறை மாற்றி அமைக்கப்பட்டது. தெற்கு கோட்டி அரசை ஆட்சி புரிந்த செண்பக பெருமாள் என்பவர், அருகில் உள்ள ஜாஃப்னா என்ற அரசை தோற்கடித்து, அங்கு இக்கோயிலை மூன்றாவது முறையாக நிறுவினார். கி.பி 1505 ஆம் ஆண்டு நடைபெற்ற போர்ச்சுக்கீசிய காலனிகளின் இலங்கை வருகையினால், இந்த மூன்றாவது கோயிலும் இடிக்கப்பட்டது.

கோயிலின் தற்போதைய தோற்றம்: தற்போதுள்ள நான்காவது கோயில், கி.பி. 1749ம் ஆண்டு டச்சுக் காலனியைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பைய்யர் மற்றும் மாப்பன்னா முதலியார் ஆகியோர்களால் குருக்கள் வளவு என்ற இடத்தில் கட்டப்பட்டது. முதலில் இக்கோயில், செங்கல் மற்றும் கற்களாலும், இதன் மேற்கூரை கருங்கற்களாலும் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இருந்த கோயிலில், இரண்டு முக்கிய கூடங்கள் தவிர, கோபுரமோ பிரகாரமோ மற்றும் சுற்றுச் சுவர் காணப்படவில்லை. ராஜகோபுரமும் வேலுடன் கூடிய மூலவரும் நீண்ட காலத்திற்கு பிறகு, 1902ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. முதன் முதலில் இக்கோயிலுக்கான சுற்றுச் சுவர் 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. அதே சமயம், பொது மக்களின் மேலான ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாக அதிகமாக அதற்கு தகுந்தாற் போல் கோயிலும் சீரமைக்கப்பட்டது. 1964ம் ஆண்டு, வசந்த மண்டபம் மிகப் பெரிய அளவில் கண்கவரும் வண்ணங்களுடன், உணர்வு பூர்வமாக புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் தலைமை நுழைவாயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோபுரம் பஞ்சதந்திரக் கதைகளை உள்ளடக்கியதாக, திராவிடர்களின் கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது.  முக்கிய தெய்வங்கள்: கருவறையை சுற்றி உள்ள பிரகாரத்தில், கணேசர், பைரவர், சூரியன் மற்றும் சந்தன கோபால சுவாமிகளின் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் தெற்கு பகுதியில், புனித தீர்த்தம் மற்றும் முருகனின் இன்னொரு வடிவமான தண்டாயுதபாணி சன்னதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் மிகப் பெரிய புனித பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய விழாக்கள்: இக்கோயிலில் தைப்பூச விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதுதவிர, கந்தசஷ்டி விரதம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, நவகிரக பூஜை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வருடாந்திர திருவிழாக்களின்போது பெருந்திரளான பக்தர்கள் கூடுவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்திச் செல்கின்றனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...