|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2012

கர்ப்பத்தடை மாத்திரைகளால் ஞாபகசக்தி பாதிக்கும்!



குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் அவர்களின் நினைவாற்றலுக்கு வேட்டுவைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. படிப்படியாக இது மறதி நோயை தோற்றுவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். திருமணமான இளம் தம்பதியர் ஆனாலும் சரி, ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி விடுவதென்றாலும் சரி ஏராளமான பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்கின்றனர். இந்த மாத்திரைகளால் எண்ணற்ற பக்கவிளைவுகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

வெள்ளைப் படுதல் பாதிப்பு கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி உறுப்புகளில் ஒருவித காளான்கள் வளரக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் பிறப்பு உறுப்பில் அரிப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன.

மறதிநோய் ஏற்படும் மேலும் நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது பெண்களின் நினைவாற்றலை பாதிக்கும். மறதி நோயை உருவாக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷாவ்ன் நீல்சன் குழுவினர் கார் ஓட்டும் போது விபத்தில் சிக்கிய பெண்களிடம் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அவர்களின் நினைவாற்றல் திறன் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் அவர்கள் அனைவரும், கர்ப்ப தடை மாத்திரையை பயன்படுத்துபவர்கள் என்பது தெரியவந்தது. இந்த மாத்திரைகள் பெண்களின் ஹார்மோன் உற்பத்தியை தடை செய்கின்றன. அதன் மூலம் நினைவாற்றல் பாதித்து மறதி நோய் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள நினைக்கும் பெண்கள் இனி கவனமுடன், மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளவேண்டும் 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...