|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2012

சென்னையில் 3 கல்லூரிகளின் அங்கீகாரங்களை ரத்துசெய்ய பரிந்துரை!சென்னை நகரிலுள்ள 3 கலை-அறிவியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய, சென்னைப் பல்கலையின் சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது.போதுமான ஆசிரியர்கள் இல்லாமை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு வசதி ஆகிய காரணங்களால், கோயம்பேட்டிலுள்ள A A Arts & Science College, முகப்பேர் கிழக்கிலுள்ள J A Arts and Science காலேஜ், மற்றும் உத்தண்டியிலுள்ள Poonga College of Arts ஆகிய கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய, பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளதாக, துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "கடந்த கல்வியாண்டின்போதே, இக்கல்லூரிகளின் அங்கீகாரங்களை ரத்துசெய்யும்படி பரிந்துரை செய்ய, சிண்டிகேட் முடிவுசெய்தது. மேலும், அக்கல்லூரிகளில் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளதாகவும், பல்வேறு பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை எனவும், பெற்றோர்களும், மாணவர்களும் அக்கல்லூரிகள் மீது புகார் அளித்திருந்தனர்.எனவே, இப்புகார்கள் குறித்து உண்மையை ஆராய, 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், அப்புகார்கள் உண்மை என்று உறுதிசெய்யப்பட்டு, இதேபோன்றதொரு மோசமான சூழல்களிலேயே, அக்கல்லூரிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இறுதியாக, இந்த ரத்துசெய்யும் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அக்கல்லூரிகளில் படித்த மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டு விட்டார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...