|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2012

9 தமிழறிஞர்களுக்கு விருது...

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது முதலான விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவ்வாண்டு தமிழக அரசின் விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு: திருவள்ளுவர் விருது  புலவர் செ.வரதராசன், தந்தை பெரியார் விருது  டாக்டர் விசாலாட்சி நெடுஞ் செழியன், அண்ணல் அம்பேத்கர் விருது  பேராசிரியர் முனைவர் க.காளியப்பன், பேரறிஞர் அண்ணா விருது  இரா. செழியன், பெருந்தலைவர் காமராஜர் விருது  திண்டிவனம் கே.இராமமூர்த்தி, மகாகவி பாரதியார் விருது  முனைவர் இரா. பிரேமா, பாவேந்தர் பாரதிதாசன் விருது  கவிஞர் ஏர்வாடி சு.இராதாகிருஷ்ணன், தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது  பேராசிரியர் முனைவர் நா.செயப்பிரகாசு, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது  பேராசிரியர் முனைவர் இரா. மோகன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...