|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2012

மனைவி ஜாலி தட்டிகேட்ட கணவனை கொதிக்கும் எண்ணெய் உற்றி கோலை!


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகில் உள்ள அரங்கனூர் மேட்டுத் தெருவில் வசிக்கும் பெரியசாமி (வயது-32). லாரி ஓட்டுனரான இவரது மனைவி பெயர் சித்ரா (வயது-28), இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளது.கடந்த ஆறாம் தேதி இரவு பெரியசாமியின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரகள் ஓடிப்போய் பார்த்தபோது, பெரியசாமி உடலெல்லாம் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு கட்டிலில் கிடந்துள்ளார்.

என்ன நடந்து என்று பக்கத்து வீட்டுகாரர்கள் விசாரித்தபோது, தன்னுடைய மனைவி சித்ரா, தான் படுத்து தூங்கிக்கொண்டிருந்த போது தனது பிறப்புறுப்பின் மீதும், வயிறு நெஞ்சு மற்றும் உடலின் மீதும் கொதிக்கவைத்த சமையல் எண்ணையை எடுத்து ஊற்றி விட்டதாக சொல்லியுள்ளார். கொதிக்கும் எண்ணையால் வெந்துபோன உடலுடன் மோசமான நிலையில் இருந்த பெரியசாமியை உறவினர்கள் கொண்டு போய் சிகிச்சைக்காக சேலம் அரசு மருதத்துவமனையில் சேர்த்தனர். பெரியசாமிக்கு மருத்துவர்கள் தவிர சிகிச்சை கொடுத்தபோது, மிகவும் மோசமாக வெந்து போயிருந்த பெரியசாமியின் உடல் மிகவும் மோசமடைந்து வந்தது, சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தநாள் பெரியசாமி இறந்து போனார்.முதலில், இது குறித்து சித்ராவிடம் போலீசார் விசாரணை செய்ததில், தன்னை தூங்க விடாமல் பெரியசாமி “செக்ஸ்” தொந்தரவு செய்ததால் தான் எண்ணையை காய்ச்சி ஊற்றினேன் என்று முதலில் கூறியுள்ளார். 

ஆனால், போலீசார் விசாரணையில் அந்தப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் சித்தராவுக்கு “கூடாநட்பு” இருப்பதாகவும், அதை தெரிந்துகொண்ட  பெரியசாமி மனைவியை கூடாநட்பு வேண்டாம் என்று கண்டித்து வந்ததாகவும், சம்பவ தினத்தன்று இரவு எட்டு மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சித்ரா வீட்டுக்கு அருகில் உள்ள மறைவான இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்த பெரியசாமி மனைவியை கூப்பிடு கண்டித்தார் என்றும், இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் கடைசியில், மனைவியை வீட்டுக்கு கூட்டிவந்த பெரியசாமி சிதராவை அடித்தார் என்று பக்கத்து வீட்டுகார்கள் கூறியுள்ளனர். பின்னர் சித்ராவிடம் போலீசார் மீண்டும் தீவிரமாக விசாரணை செய்ததில், தான் விருப்பம் போல மூன்றாம் நபர்களுடன் “கூடநட்பு” கொள்ள கணவரான பெரியசாமி இடையூறாக இருந்ததாகவும், இதை விரும்பாத சித்ரா கனவனை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதற்காக வீட்டில் இருந்த “ரீபைன்ட்” ஆயிலை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெரியசாமியின் மீது ஊற்றி கொலை செய்தேன் என்று சித்ரா போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...