|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 January, 2012

டான்செட் தேர்வு தேதி அறிவிப்பு...


சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்அதன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் வழங்கும் முதுநிலை தொழிற் பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வினை நடத்தி வருகிறதுஅதன்படிவரும் கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுஎம்.பி.படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும்எம்.சி.படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறதுஎம்.., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., படிப்புகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நுழைவுத் தேர்வு நடத்தப்படும்இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள்பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது அண்ணா பல்கலை வளாகத்தில் நேரில் சென்றோ பெயரை பதிவு செய்து கொள்ளலாம்தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரிஉட்பட 15மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும்மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...