|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 January, 2012

புதுச்சேரி பதிவு வாகனங்களுக்கு கட்டுப்பாடு...


 புதுச்சேரி பதிவு எண்ணில் தமிழகத்தில் ஓடும் கார், டூவீலர்களுக்கான வரியில் முறைகேடு செய்யும் வாகனங்களை பறிமுதல் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த கார்களுக்கான வரி விதிப்பு முறையில், கார்களின் விலை, 10 லட்சம் ரூபாயாக இருந்தால், காரின் மதிப்பில், 10 சதவீதமும், அதற்கு மேல் விலை உள்ள கார்களுக்கு, ஆயுள் கால வரியாக, 15 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியில், 20 லட்சம் ரூபாய்க்கு கீழ் மதிப்புள்ள கார்களுக்கு, ஆயுள் வரி, 6,000 ரூபாயும், அதற்கு மேல் உள்ள கார்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் வரியாக வசூலிக்கப்படுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி வரி விதிப்பு இடையே, பல மடங்கு தொகை வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் கார் வாங்குபவர்கள், புதுச்சேரி மாநிலத்தில் போலியாக முகவரி கொடுத்து, நிரந்தர பதிவு செய்கின்றனர். பலர் புதுச்சேரியிலேயே கார்களை வாங்கி பதிவு செய்து, தமிழகத்தில் பயன்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கு, பல கோடி ரூபாய் வருமானம் குறைகிறது.இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் பதிவு செய்து, தமிழகத்தில் ஓடும் வாகனங்கள் குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து, பதிவு செய்த வாகனங்களை பறிமுதல் செய்யவும், அரசு உத்தரவிட்டுள்ளது. பறிமுதலாகும் வாகனங்களுக்கு, தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள வரியை செலுத்தினால், மீண்டும் வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...