|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 January, 2012

இதயநோயை உணர்த்தும் ஆண்மைக்குறைவு..


இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்ஸுவல் தெரபி’ எடுத்த சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதற்கு காரணம் முறையற்ற உணவும், அதனால் கிலோ கணக்கில் உடலில் படியும் கொழுப்பும் தான் என்கின்றனர் மருத்துவர்கள். 

உடல் உழைப்பு குறைவு காடு, கழனி என்று வேலை பார்த்தனர் நம் முன்னோர். இன்றைக்கு மூடிய அறை, ஏசி காற்று, சட்டைக் கசங்காமல் பார்க்கும் வேலையைத்தான் பலரும் விரும்புகின்றனர். இதனால் உடல் உழைப்பு குறைந்து உண்ணும் உணவு முழுவதும் ஆங்காங்கே கொழுப்பாக படிகிறது. தொப்பை அதிகரிப்பதால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 

மனித உடலே உழைப்பதற்காகத் தான் உருவாக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடலானது நோய்களின் கூடாரம் ஆகிவிடும். உழைத்தால் தான் உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால் தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பின்மை தான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஆண்களுக்கு உடல் உழைப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத் தான் விரும்புகிறார்கள். சொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை. அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது.

படியும் கொழுப்புகள் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. ஆனால் ஆரோக்கியத்திற்காக உண்ணுதல் என்ற நிலை மாறி, சுவைக்காக உண்பது என்ற நிலை மாறிவிட்டது. வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக உண்பதால் உடலுக்குள் எண்ணெய் அதிகமாக செல்கிறது. எந்த எண்ணெய், என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச் சேர்க்கிறார்கள். இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இந்த கொழுப்பானது இதய நோய்களையும், டைப் 2 நீரிழிவையும், ஒரு சில வகை புற்றுநோயையும் ஏற்படுத்துகிறது. 

ஆண்மைக் குறைவு இதயம் ரத்த நாளங்களால் சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக உறவு கொள்ள முடியாது. இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். யானை வரும் முன்பே, மணியோசை வருவதைப் போல இதய பாதிப்பு என்கிற நோயை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக் குறைவு தோன்றுகிறது. எனவே உடலில் கொழுப்பை குறைக்க ஆரோக்கியமான உணவிற்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...