|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 April, 2012

கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடிசென்னை எழும்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தெந்த கடைகளில் தமிழ் பெயர் இல்லை என்பதை ஆய்வு செய்து , அந்த கடை உரிமையாளர்களை சந்தித்து சென்னை மாநகராட்சியின் 2010 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் மொழி பலகை வைக்க வேண்டும் என்ற ஆணையை தமிழர் பண்பாட்டு நடுவம் ஆதரவோடு இளைஞர்கள் சிலர் காட்டினர். இந்த ஆணைப் படி பெயர் பலகைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்று கடை காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வணிகர்களும் தங்கள் தவறை உணர்ந்து, தங்கள் கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைக்கிறோம் என்ற வாக்குறுதியை கொடுத்தனர். மேலும் அறிக்கையை பெற்றுக் கொண்டதற்கு சாட்சியாக படிவத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தனர். மேலும், தமிழ் பெயரிடாத கடைகளை பற்றிய விவிரங்களை சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், மேயரிடமும் தமிழர் பண்பாட்டு நடுவம் அனுப்ப உள்ளது. மீண்டும் சென்னையில் வணிகர்களுக்கு ஒரு அரசு அறிக்கை வெளி வந்தால் தான் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைப்பார்கள். அதற்கும் தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...