|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 April, 2012

பார்த்ததில் பிடித்தது!

2 landu thina asayaaaaaaaaa 

சுஷ்மாவா செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!.. இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ் அவர்களும் மற்றும் காங்கிரஸ் எம்பிமார்களும் செல்லும் இடம்மெல்லாம் பசுரிகளைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்க்க வரும் எல்லா இலங்கை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஏதாவது ஒரு பரிசுபொதியை இவர்களுக்கு வழங்கிய வண்ணம் இருக்கின்றனர். டக்ளஸ் தொடக்கம் பிள்ளையான், கருணா என எல்லோரும் பரிசுகளை வழங்கிவருகின்றனர். இதில் போதாக்குறைக்கு பசில் மற்றும் மகிந்தரும் தமது பரிசுகளையும் வழங்கியுள்ளனர். சில பரிசுப் பொதிகள் பெரிதாகவும் சில பரிசுப் பொதிகள் சின்னதாகவும் இருப்பதாக அதிர்வின் விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார். மகிந்தர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சுஷ்மாவுக்கு அதிஉயர் நவரத்தினக் கல் பதிக்கப்பட்ட ஆபரணத்தை வழங்கினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் விளையும் ஸபையர் மற்றும் சில மாணிக்கக் கற்கள் கொண்ட ஆபரணங்களையே சுஸ்மா பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்துசெல்லும்போது பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்த ஆவணங்களை இவர்கள் கொண்டு செல்கிறார்களோ இல்லையோ, பரிசுப்பொதிகளை மட்டும் நிச்சயம் கொண்டுசெல்வார்கள். ஒருவேளை எடை அதிகமாக இருந்தால், ஆவணங்களை விட்டுவிட்டு தமது பரிசுப்பொதிகளோடு செல்லவேண்டிய நிலைகூடத் தோன்றலாம் என்று சொல்லும் அளவுக்கு அங்கே பரிசுகள் குவிந்துள்ளதாம் ! இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை சென்று தமிழர்களின் நிலையைக் கேட்டறிந்து ஆவனசெய்யும் என மக்கள் நம்பியிருக்க இவர்களோ இலங்கை அரசின் உல்லாச உபச்சாரத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...