|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 April, 2012

மீனவர்களுக்கு வயர்லெஸ்!

கடலில் மீன் பிடிக்கும்போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள், இன்னல்கள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கு வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனங்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் கடல் சீற்றங்கள், இன்னல்கள் குறித்து உடனடியாக கரையில் இருக்கும் அரசு துறையினருக்கும் மற்ற மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்க ஏதுவாக மீனவர்களுக்கு ரூ.14,000 மதிப்பில் கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனங்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, சின்ன ஏர்வாடி, பாம்பன், ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு இந்த சாதனங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ராமேஸ்வரம், ராமநாதபுரம், மண்டபம் ஆகிய இடங்களில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை பெற்று வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.மேலதிக விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...