|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 April, 2012

தேவையா இழுபறி

நேற்று சென்னை அணி, 147 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டியிருக்கலாம். கடைசி 12 பந்தில் 16 ரன்கள் தான் தேவைப்பட்டன. ஆனால், தோனியும், பிராவோவும் ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்து, போட்டியை கடைசி பந்து வரை கொண்டு சென்றனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.எட்டிவிடும் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு பத்ரிநாத், டு பிளசி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பின்னி வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார் டு பிளசி. தொடர்ந்து அசத்திய இவர், அமித் சிங் ஓவரில் இரு பவுண்டரி விளாசினார். பின் மனேரியா பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.மறுமுனையில் பந்துகளை வீணடித்த பத்ரிநாத் 15 ரன்னில் (22 பந்து), பிராட் ஹாக் சுழலில் "ஸ்டம்டு' ஆனார். திரிவேதி, கூப்பர் பந்துகளில் பவுண்டரி அடித்தார் ரெய்னா. அபார ஆட்டத்தை தொடர்ந்த டு பிளசி, இத்தொடரில் மூன்றாவது முறையாக அரைசதம் கடந்தார்.திரிவேதி பந்தில் சிக்சர் அடித்த டு பிளசி (73 ரன்கள், 52 பந்து), கூப்பர் பந்தில் அவுட்டானார். இதே ஓவரின் மூன்றாவது பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்த ரெய்னாவும் அவுட்டாக, போட்டியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அமித் சிங் வீசிய போட்டியின் 18வது ஓவரில் பிராவோ, தோனி தலா ஒரு பவுண்டரி அடிக்க, சற்று "டென்ஷன்' குறைந்தது."திரில்' வெற்றி:கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. பின்னி வீசிய இந்த ஓவரின் முதல் இரு பந்தில், 2 ரன்கள் எடுக்கப்பட்டன. 3வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். அடுத்த இரு பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்கப்பட, கடைசி பந்தில், வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டன.பந்தை எதிர்கொண்ட தோனி, "ஸ்கொயர் லெக்' திசையில் அடித்து 2 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து "திரில்' வெற்றி பெற்றது. தோனி (15), பிராவோ (16) அவுட்டாகாமல் இருந்தனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...