|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 July, 2012

தமிழ் உணர்வு பெரியார் தி.கா.மட்டும்தானா?சென்னை தாம்பரத்தில் இலங்கை விமானப் படையினருக்கு பயிற்சி தந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள்ளாகவே 4 இலங்கை ராணுவ அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு வந்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,இலங்கை, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 அதிகாரிகள் பயிற்சிக்காக தமிழ்நாட்டின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாமுக்கு வந்துள்ளனர்.
ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இனவெறி ராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி தரக்கூடாது என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்மையில் தாம்பரத்தில் பயிற்சி பெற்ற சிங்கள அதிகாரிகள், தமிழகத்தின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.இந்நிலையில் குன்னூரில் மீண்டும் பயிற்சிக்காக மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. சிங்கள படையினரை குன்னூரில் இருந்து வெளியேற்றாவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...