|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 July, 2012

பிரபாகரனின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்' பழ.நெடுமாறன்.

பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம்' நூலின் அறிமுக விழா சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய பழ.நெடுமாறன்,"உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட முடியாது.ஏனெனில் பிரபாகரன் போராட்டத்துக்கு எந்த ஒரு நாடும் உதவி செய்யவில்லை.மாறாக 20 நாடுகள் அணி திரண்டு அவரை ஒழிக்க முயற்சித்தன.


உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிதி திரட்டி ஆயுதங்களைப் பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் போரை நடத்தியவர் பிரபாகரன்.இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம்.மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும். பிரபாகரனின் வீரம் செறிந்த வரலாறு கொண்ட இந்நூல்,தமிழக இளைஞர்களுக்கு அளித்த ஆயுதமாகும்.இந்நூலைப் படிக்கும் இளைஞர்கள் பிரபாகரனின் அடுத்த கட்ட போராட்டத்துக்கு துணை நிற்க வேண்டும்,தோள் கொடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர் படுகொலையில் ராஜபக்ச மட்டும் குற்றவாளி அல்ல. மன்மோகன்சிங்கும் குற்றவாளி,அதற்கு துணையாக நின்ற கருணாநிதியும் குற்றவாளிதான்" என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...