|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2011

பிரீமாண்டில் மகா சிவராத்திரி

சான்பிரான்ஸிஸ்கோ : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வளைகுடா பகுதியில் உள்ள பிரிமாண்ட் இந்து கோயிலில் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மகா சிவாரத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மார்ச் 2ம் தேதி காலை 9 மணியளவில் ஆரம்பித்த சிவபெருமானின் அபிஷேகத்தை ‌தொடர்ந்து மாலை பிரதோஷ பூஜையும் நடைபெற்றது. பின் இரவு 7 மணியளவில் பிரதம கால பூஜை ஆரம்பித்தது. இதில் விஷேச கலச பூஜையை தொடர்ந்து பால், தயிர், தேன், போன்ற 11 விதமான பொருட்களால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களின் பக்தி பாடல்களுடன் சிவபெருமான் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தது மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது. அதன் பின் நடந்த மகா தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
பின் திவதிய கால பூஜை , திரிதிய கால பூஜை, அதன் பின் ருத்த ஹோமமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 3ம் தேதி  காலையில் சூரிய கால பூஜை சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை நடந்த மகாமிருத்ஞ்சயாய ஜபத்தை தொடர்ந்து சீனிவாசன் சாஸ்திரிகள் அனைத்து பூஜைகளையும் மிகவும் சிறப்பாக செய்தார்.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்தனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...