|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2011

பார்வதி அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அஸ்தி வங்கக் கடலில் நாளை கரைக்கப்படுகிறது. இதில் வைகோ பங்கேற்கிறார். அதனையொட்டி நடக்கும் அஞ்சலிக் கூட்டத்துக்கும் அவர் தலைமை தாங்கிப் பேசுகிறார்.


அன்னை பார்வதி அம்மையார் மறைந்த 31 ஆவது நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தலைநகர் சென்னையில், வங்கக் கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க்கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது. பிரபாகரனை, தன் மணிவயிற்றில் சுமந்த அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச் சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்ந்து இருக்கிறது. அதனை, வங்கக் டலில் தூவிட இருக்கிறோம்.

அதே நேரத்தில், கடலுக்கு அப்பால் ஈழத்தில், கண்ணீர்க்கடலில் தத்தளிக்கும் தமிழ் ஈழ மக்களைப் பாதுகாத்து, அவர்கள் மானத்தோடும், உரிமையோடும் வாழ, அவர்களின் தாயக மண்ணை மீட்டெடுத்து, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைத்திட, அன்னை பார்வதி அம்மையாரின் நினைவாக வீர சபதம் ஏற்போம்!

எனவே, மார்ச் 22 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு, பத்தினித்தெய்வம் கண்ணகி சிலை அருகில், தமிழ் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து, நம் அன்னையின் புகழ் அஞ்சலியில் பங்கு ஏற்குமாறு அன்போடு வேண்டுகிறேன.

-இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...