|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 June, 2011

திமுக அரசு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை-ஜப்பான் தூதர் அகிடகா சைக்கி!

தமிழகத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக பெருமளவில் நிதி பெற்ற திமுக அரசு ஆனால் எதையுமே செய்யவில்லை. இப்போதைய அதிமுக அரசாவது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என ஜப்பான் தூதர் அகிடகா சைக்கி பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று அகிடகா சைக்கி சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் ஜப்பான் தூதரக ஆலோசகர் மசுகா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியத் தொழில் கூட்டமைப்பான சிஐஐ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சைக்கி பேசினார். அப்போது அவர் முந்தைய திமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.

அவர் பேசுகையில், முந்தைய திமுக அரசு சாலைகள் மற்றும் துறைமுகத்தை மேம்படுத்துவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இந்த விவகாரத்தை எடுத்துக் கூறினேன். அவர் இந்த விவகாரத்தை கவனிப்பதாக உறுதி அளித்தார். எனக்கும் இந்த விவகாரத்தில் புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தை விரைந்து கவனிக்க வேண்டும். கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை எனில் ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வேறு மாநிலங்களை பார்க்க வேண்டியிருக்கும். ஜப்பானில் இருந்து வர்த்தகக் குழு ஒன்று செப்டம்பரில் இந்தியா வர உள்ளது. அந்தக் குழுவின் முக்கிய நகரங்கள் பட்டியலில் சென்னையும் இடம்பெற்றிருக்கும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...