|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2011

அதிக எடை கொண்ட குழந்தைகள் எண்ணிக்கை சென்னையில் அதிகரிப்பு!

சென்னையில் பள்ளிக் குழந்தைகளில் அதிக பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல், பள்ளிக் குழந்தைகளிடைய நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது. சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையம் சார்ப்பில் பள்ளி குழந்தைகளின் உடல் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம், 23 அரசு மற்றும் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வின் முடிவில் தெரியவந்த முடிவுகள் பின்வருமாறு: இதில், சென்னை குழந்தைகளிடையே அதிக உடல் எடைக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிந்தது. மொத்த கணக்கெடுப்பில், 34 சதவீத மாணவ, மாணவியர் அதிக எடையுடன் இருந்தனர். 7 சதவீத மாணவ, மாணவியரின் ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகமாக இருந்தது.

எதிர்காலத்தில் உடல்நலத்தை கண்டுகொள்ளாத பட்சத்தில், சக்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஆய்வில் கலந்து கொண்ட அதிக எடை கொண்ட பலருக்கும் உடலில் ஆங்காங்கே தேவையற்ற சதைமடிப்புகள் இருந்தது.

இதுவும் பிற்காலத்தில் நீரிழிவு நோய் வழிவகுக்கும். அதிக உடல் எடையால், பருவமடைந்த மாணவியர் இடையே மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் ஏற்பட்டு நீரிழிவு நோய் உண்டாகலாம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...