|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2011

மேஜையில் தாளம்போட்டு வாய்ப்புகள் கேட்டேன்!

சஞ்சய், நந்தினி ஜோடியாக சுப்புசுஜாதா இயக்கிய “தாண்டவக் கோனே படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியதாவது:

புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன். எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார்.

பிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி பாடகர்கள் மற்றும் ஆர்கெஸ்ராவோடு போய் வாய்ப்பு கேட்க ஆரம்பித்தோம். தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் உட்கார வைத்து பாடி காட்டுவோம். யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் எந்த ஆர்கெஸ்ட்ராவும் இல்லாமல் பஞ்சு அருணாசலத்துக்கிட்ட “மச்சானை பார்த்தீங்களா மலைவாழ தோப்புக்குள்ளே என்ற பாட்டை பாடி மேஜையில் தாளம் போட்டு காட்டினேன். அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இளையராஜா கிட்ட திறமை இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என்று அவரிடம் கேட்டவர்களிடம் நான் கண்டுபிடிக்கா விட்டாலும் பெரிய இசையமைப்பாளராக வந்திருப்பார். காரணம் அவர்கிட்ட திறமை இருக்கு என்றார்.இந்த படத்தின் டைரக்டர் சுப்புசுஜாதாவும் அப்படித்தான். அவரிடம் திறமை இருக்கிறது. இவ்வாறு இளையராஜா 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...