|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

ரசிகர்களுக்கு, நிச்சயம் இந்த செய்தி வருத்தத்தை அளிக்கும்!.தள்ளி போகுமா மங்கத்தா?

மங்காத்தா படத்திற்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களில், க்ளவுடு நைன் பெயரையே போடாததால் அப்சட் ஆகிபோன துரை தயாநிதி தரப்பினர், படத்தை ஞானவேல் ராஜாவிடமிருந்து திரும்ப பெற்று ‌வேறு ஒருவருக்கோ அல்லது தாங்களே வெளி‌யீடும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் நடிப்பில் உருவாகியிருக்கும் 50வது படம் மங்காத்தா. இப்படத்தை க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரித்துள்ளார். படம் இம்மாத வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் க்ளவுடு நைன் பேனரில் முன்னர் தயாரிக்கப்பட்ட வ குவாட்டர் கட்டிங் உள்ளிட்ட சில படங்களால் நஷ்டம் அடைந்திருப்பதாலும், தற்போதைய ஆட்சி மாற்றத்தாலும் படத்தை வாங்க விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் தயங்குகின்றனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் உருவானது. அதேசமயம் மங்காத்தா அஜீத்திற்கு 50வது படமும் கூட, இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் உள்ளதால் படத்தை தள்ளிப்போடவும் முடியவில்லை.

இப்பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு க்ளவுடு நைன் பேனரில் வெளியிடுவதற்கு பதிலாக ‌வேறு ஏதாவது ஒரு பேனரில் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்தது துரை தயாநிதி தரப்பு. அதன்படி மங்காத்தா படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனமான, கே.இ.ஞானவேல் ராஜா வெளியிட முன்வந்தார். இதனையடுத்து மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலையில் மும்மரமாக இறங்கினார் கே.இ.ஞானவேல் ராஜா. சரி எப்படியோ, மங்காத்தா ரிலீஸ் பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்தது என்று எண்ணியிருந்த வேளையில், புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கிறது.

மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரங்களில், க்ளவுடு நைன் மூவிஸ் என்ற பெயரே வரவில்லை. இதனால் துரை தயாநிதி தரப்பு மிகுந்த அப்செட்டாகியுள்ளது. படத்தை தயாரித்தது நாம் தான், நமது பெயரையே விளம்பரத்தில் போடவில்லை, அப்படி நமது பெயரை மறைத்து, இந்தபடத்தை ஞானவேல் வெளியிட வேண்டாம் என்று துரை தயாநிதி தரப்பு கருதுகிறது. படத்தை ஞானவேல் ராஜாவிற்கு பதிலாக ‌வேறு ஒருவருக்கோ அல்லது தாங்களே வெளி‌யிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மங்காத்தா ரிலீஸ் ஆகும் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...