|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 August, 2011

அண்ணா ஹசாரேவுக்கு ஏதாவது ஆனால் அரசே பொறுப்பு கெஜ்ரிவால்!

9வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவின் உடல்நிலை சற்று மோசமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. அவ்விதம் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு என்று அண்ணா ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், நாளையே பாராளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆனால், உடனே அண்ணா ஹசாரே தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுவிடுவார் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர், அண்ணா ஹசாரேவின் உடல்நிலை குறித்து தாம் மிகவும் கவலை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், உண்மையிலேயே பிரதமருக்கு அண்ணாவின் உடல்நிலை குறித்து கவலை இருக்குமானால், அவர் அண்ணா ஹசாரே விடுக்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒன்றாக ஒரே கருத்தில் இருப்பதால், அரசு உடனடியாக தங்கள் தரப்பு முன்வைத்துள்ள லோக்பால் மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...