|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 December, 2011

பள்ளி மாணவியுடன் விஷம் குடித்த டிரைவர் சாவு...


சேலம் ஓமலூர் அருகே உள்ள மூங்கில்பாடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணபதி (வயது 30). இவருக்கு லலிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். சேலம் 4 ரோடு அருகே உள்ள ஒரு பள்ளியில் வேன் டிரைவராக கணபதி பணியாற்றி வந்தார்.  இவர் தினமும் காலை வேளையில் பள்ளிக்கு வேன் மூலம் மாணவிகளை அழைத்து வந்து விட்டு, பள்ளி முடிந்ததும் மாலையில் வீட்டிற்கு கொண்டு விடுவார். அப்போது சேலம் செங்கரட்டை சேர்ந்த மாணவி செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கணபதி டிரைவராக உள்ள வேனில் பள்ளிக்கு சென்று வந்தார். 9ம் வகுப்பு படித்து வந்த செல்வியும், கணபதியும் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் முதலில் நட்பாக பழகிய அவர்களுக்குள் பின்னர் காதல் மலர்ந்தது.

மனைவி, குழந்தைகள் உள்ள நிலையில் அதனை மறந்த கணபதிக்கு மாணவி செல்வியுடன் உள்ள தொடர்பு புதிய மகிழ்ச்சியை தந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் உள்ள முறைகேடான கள்ளக்காதல் பலருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கள்ளக் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டனர். அதன்படி நேற்று நள்ளிரவு செல்வி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கணபதியை ரகசியமாக சந்தித்தார்.பின்னர் கள்ளக்காதல் ஜோடிகள் அந்த பகுதியில் உள்ள மஞ்சள் காட்டு பகுதிக்கு சென்று உள்ளனர். இதற்கிடையே காலை வேளையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் கணபதி,செல்வி ஆகியோர் மயங்கி கிடப்பதை பார்த்தனர். உடனடியாக அவர்களை சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர் கணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மேலும் ஆபத்தான நிலையில் உள்ள மாணவி செல்விக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி ஓமலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...