|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 December, 2011

தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது!


தனுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி என்ற தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது. தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது. இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு, இணைய வலிமை குறித்து புரிய வைக்க ஒரு வாய்ப்பாகவே இந்தப் பாடல் பார்க்கப்படுகிறது.

ஒரு கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் குறித்து டைம் பத்திரிகையே தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த கொல வெறி பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது. ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் முழு ஆடியோவும் வெளியாக உள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிருத், ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...