|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 December, 2011

மார்பில் குத்திய கத்தியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்...


கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி தங்கம் (35). இருவரும் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைலஸ் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி தங்கத்தின் நடத்தையில் ரெங்கநாதன் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் கணவன்  மனேவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வேலை முடிந்து தங்கம் ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த ரெங்கநாதன், திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தங்கத்தின் மார்பில் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மார்பில் குத்திய கத்தியதில் தங்கம் வலி தாங்க முடியாமல் அலறினார். இருப்பினும் மார்பில் குத்திய கத்தியுடன் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தங்கம் நடந்து சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட கத்திக்குத்து காயத்துடன் தங்கம் வந்ததால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டாக்டர்கள் , அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் பொலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...