|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 December, 2011

கள்ளத் தொடர்பால் விபரீதம் எங்கே செல்லும் தமிழகம்?

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், மாடியிலிருந்து குதித்த பீகார் வாலிபர், தலையில் அடிபட்டு இறந்தார்.பீகாரை சேர்ந்தவர் நாராயண திவாரி,30, இவர், எருக்கஞ்சேரியில் வீடு எடுத்து, தனியாக வசித்து வந்தார். தண்டையார்பேட்டையில், சுந்தரம்பிள்ளை தெருவில், ஸ்டீல் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரியும் நாராயண திவாரிக்கும், அப்பகுதியில் வசிக்கும் திருமணமான இளம்பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது. இது, அப்பெண்ணின் கணவனுக்கு தெரிந்ததும், மனைவியை அடித்து உதைத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அப்பெண்ணின் வீட்டிற்கு நாராயண திவாரி சென்றார். இதையறிந்த அப்பெண்ணின் கணவன், உறவினர்களுடன் வீட்டை முற்றுகையிட்டார்.இதனால், பயந்துபோன நாராயண திவாரி, அவர்களிடமிருந்து தப்பிக்க, மொட்டை மாடியிலிருந்து குதித்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...