|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 December, 2011

முல்லைப் பெரியாறு அணை காக்க வைகோ விழிப்புணர்வு பிரச்சாரம்!

கேரள அரசு முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறது. கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பெரியாறு அணை உடையும் வகையில் உள்ள குறும்படம் 5 லட்சம் சி.டி.க்களை தயாரித்து கேரளாவில் வினியோகித்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக அணை உடைந்து விடும் என்பதை மேலும் நம்பும் வகையில் டேம் 999 என்ற திரைப்படத்தை கேரள அரசின் நிதி உதவியோடு கேரளாவில் உள்ள பணக்காரர்களின் தூண்டுதலோடு அக்கிரமமான நோக்கத்தை சித்தரிக்கும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட முடிவு செய்தார்கள். சென்னையில் 10 தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட இருந்தது. இதையடுத்து நான் தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் மூலம் இந்த படத்தை திரையிட வேண்டாம் என்று எழுதினேன். அதன் பயனாக டேம் 999 படத்தை வெளியிடமாட்டோம் என்று அவர்கள் என்னிடம் உறுதி அளித்தனர். மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வருகிற 15 ந்தேதி அவர்கள் ஒரு நாள் திரையரங்கு மூடப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் நேற்று ஒரு கூட்டத்தை கூட்டி அணையில் 120 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். பெரியாறு அணையை உடைக்க ரூ.40 கோடியும், புதிய அணை கட்ட ரூ.600 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கேரள அமைச்சர் ஜோசப் சொல்கிறார்.

இந்திய வரைபடத்தில் கேரள இருக்கிறதா? என அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். நாளைய தினம் கம்பத்தில் எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தேன். அங்கு தற்போது தடை உத்தரவு உள்ளதால் தேனியில் உண்ணாவிரதம் நாளை நடைபெறும். முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய போலீசாரை நிறுத்த பிரதமரை சந்தித்து வற்புறுத்தி உள்ளேன். கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். 7 ரிக்டர் அளவில் பூகம்பம் வந்தாலும் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது. பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழர்கள் வெகுண்டு எழுவார்கள். பெரியாறு அணை குறித்து கேரள அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பி வருகிறார்கள். ஆனால் தமிழக கட்சிகள் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றன. முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை. தமிழகமும் அனுமதிக்காது. கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகைக் கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...