|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2012

4 வயது சிறுமியை 2 ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் வழக்கு சிபிஐ விசாரணைக்கு...

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள்தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில் உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள்.

இந்த நிலையில்தான் பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர். இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம்.

ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதியினர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் விட்டனர். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததால் கடலூரைச் சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியை மீது வழ்ககுப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அது எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் வழ்ககில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பெற்றோர் மற்றும் மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழ்ககு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து இன்னும் 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...